ஆனால் உண்மை அதுவல்ல..
நாம் அமைதியாக 'சிவனே'ன்னு
தான் இருப்போம்... இந்த நேரத்தில்
இப்போது சொல்லுங்கள் ஆசை எங்கிருந்து வந்தது? நமக்குள்ளிலிருந்து வந்ததா..? இல்லை.. டிவியில் இருந்து நமக்குள் வந்தது...
இப்படித்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அந்த பொண்ணு கட்டி இருக்கிற புடவை மாதிரி, அந்த நகை மாதிரி, அந்த மாதிரி வீடு, அந்த மாதிரி உடல் அமைப்பு, என்று வெளி உலகம் நமக்குள் ஆசையை தூண்டுகின்றது.
ஒவ்வொரு புலன்கள் வழியாகவும் பாம்பு அதன் புற்றினுள் நுழைவது மாதிரி சத்தம் இல்லாமல் நமக்குள் ஐந்து புலன்கள் வழியாக ஆசைகள் நுழைந்து விடுகின்றன.
நுழைந்த பாம்பு சும்மா இருக்குமா?
கடித்து விஷம் தலைக்கு ஏறி துன்பம் தரும் அல்லவா அது போல துன்பப்படுகிறேன் என்கிறார் மாணிக்கவாசகர். ஒரு தலை பாம்பு அல்ல... ஐந்து தலை பாம்பாம். ஐந்து புலன்கள் வழியாகவும் உள்ளே நுழைந்து விடுகின்றன என்கிறார். அந்த ஐந்து தலை நாகத்திடம் இருந்து என்னை காப்பாற்று கை விட்டு விடாதே என்று பயந்து போய் கதறுகிறார்.
ஆனால் நீதான் பாம்பை கழுத்தில் சுத்தி வைத்திருக்கிறாயே. உனக்கு என்ன பயம்.? இந்த ஆசை என்ற பாம்பிடம் இருந்து மட்டும் என்னை காப்பாற்று என்கிறார்.
ஆசையால் அழியாதவர்கள் யாராவது இருக்கிறார்களா..? நம் மனதில் இனி ஆசைகள் எழும் போது ஐந்து தலை நாகம் படம் எடுப்பதாக உணர்ந்துவிட்டாலே அந்த ஆசையை எப்படி கையாள வேண்டும் என்று இதன் மூலம் உணர்ந்துகொள்ளுங்கள்...
ஆக நமக்குள் ஆசைகள் வரும் போது
பயப்பட வேண்டும். இது நம்மை பின்னாளில் என்னவெல்லாம் சிக்கலில் இழுத்து விடப் போகிறதோ என்று பதற வேண்டும். வீடுபேறு வேண்டும் என்று ஆசைப் பட்டால் எவ்வளவு துன்பங்களை சகிக்க வேண்டி இருக்கிறது பாருங்கள்..
No comments:
Post a Comment