வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு, இப்பவே ரொம்ப வெயில் அதிகமாக இருக்கு, இன்னும் போக போக நிச்சயம் வெயிலின் தாக்கம் அதிகமாகதான் இருக்கும்.
அதை சமாளிக்க என்னன்னா வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
எந்த மாதிரி உணவுகள் சாப்பிடலாம்?
நிறைய தண்ணீர் குடிக்கனும். தண்ணீரை காய்ச்சும் போது சிறிது சீரகம் போட்டுக்கலாம். ஒரு சில நாட்கள் வெந்தயம் போட்டுகலாம். நீர் மோர் அருந்தலாம்.
பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கலாம்?
வெயில் காலங்களில் தர்பூஸ், கிர்னி, ஆரஞ்சு, லெமன் ஜூஸ்கள் எடுத்துகலாம். முள்ளங்கி, பூசனி, சௌ சௌ, நூக்கல், பீர்க்கங்காய் போன்ற நீர் காய்களை உணவில் அதிகம் சேர்த்துக்கலாம். காரம் குறைவாக சேர்த்துக் கொள்வது நலம்.
வெயிலில் விளையாடிட்டு வரும் குழந்தைகளுக்கு வந்ததும் ஜூஸ் கொடுக்க வேண்டாம் கொஞ்சம் நேரம் கழித்து வேர்வை அடங்கியதும் கொடுக்கலாம்.
சருமத்தை எப்படி காத்துக் கொள்வது?
இரண்டு மூன்று முறை குளிக்கலாம். வெளியில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசன் போட்டுக்கலாம். குடை எடுத்து செல்வதும் மிகவும் நல்லது. மெலிதான பருத்தி ஆடைகள் உகந்தது. ரொம்ப இறுக்கமாய் இல்லாமல் உடைகள் அணிவது நல்லது.
முகத்துக்கு சந்தனத்துடன் பன்னீர் கலந்து பேக் போட்டா வேர்க்குரு, கட்டி வராது. வெள்ளரிக்காயை ஸ்லைஸ் செய்து கண்ணில் வைத்தால் குளிர்ச்சி கண் கட்டி வராது.
நீர்க்கடுப்பு பாதிப்பு
நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி எரிச்சல் ஏற்படும். கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால், களைப்பு அதிகமாகும். சிலருக்கு சிறுநீரில் கலந்துள்ள உப்புகள் சரியாக கரையாமல் பாதிப்பு ஏற்படும். சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். எனவே, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
பானங்கள்
பல்வேறு வகையான குளிர்பானங்கள், மது மற்றும் ரெப்ரிஜிரேட்டரில் வைக்கப்பட்ட தண்ணீர், குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். அதிலும், நீண்ட நேரம் வெயில் சுற்றி, திரிந்து வந்தவர்கள் வெப்பம் தாங்காமல் ரெப்ரிஜிரேட்டரில் இருக்கும் பானத்தை உடனே எடுத்து குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே உடல் வெப்பம், தாகம் தணிந்துவிடும் என்று எண்ணி இவ்வாறு குடிப்பார்கள். இது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இதமான தண்ணீர், அல்லது மண்பானையில் வைக்கப்பட்ட தண்ணீர், மோர், தயிர், இளநீர் போன்றவற்றை குடிக்கலாம்.
வீட்டை எப்படி குளிர்ச்சியா வச்சுக்கறது ?
முடிந்தவரை பகலில் சமைத்து விடுவது நல்லது. பகலை விட இரவு நேரத்தில் வீட்டினுள் வெப்பம் அதிகமாக தெரியும். அதனால் இரவு சமைத்தால் வீட்டின் வெப்பம் இன்னும் கூடுதலா தெரியும். ஆதலால் முடிந்த அளவு இரவிற்க்கும் சேர்த்து பகலிலேயே சமைத்து விடுவது நல்லது.
தினம் வீட்டை தண்ணீர்க்கொண்டு துடைத்து விடுங்கள். வீட்டில் குறைவான விளக்குகளை உபயோகியுங்கள். மஞ்சள் நிற ஆடம்பர விளக்குகள் வெப்பத்தை அதிகமாக வெளியிடும்.
குளுமையான வெள்ளை நிற சி எஃப் எல் பல்புகள், டியூப் லைட்டுகள் சிறந்தது.
சீலிங் பேன் உபயோகித்தாலாலும் காற்று வெப்பமாய் இருக்கும். டேபிள் பேன் உபயோகித்தால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும். அதும் டேபிள் பேனை ஜன்னலருகில் இருந்தால் குளிர்ச்சியாய் காற்று வரும்.
மூங்கில் திரைகள்
பால்கனி மற்றும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பயன்படுத்துங்கள். முடிந்தால் அவற்றை அப்போதைக்கு அப்போது ஈரப்படுத்தி வையுங்கள். அவை வீட்டை கூலாக வைத்திருக்கும்.
Contact us
Earnest Tax Consultancy
+91 9551 52 9551 | 8220 16 0093
No comments:
Post a Comment