www.earnesttax.in |
Saturday, March 17, 2018
அது என்னா தேர்தல் நிதிப் பத்திரம்? 9 நாட்களில் ரூபாய் 222 கோடிக்கு விற்பனையா? | POLITICAL FUND | ELECTION BOND | POLITICAL DONATION
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக, தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்க தகுதியானவர்கள் யார்?
இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களை இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கலாம். இந்த நிதியானது, குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் வாயிலாகவே செலுத்த முடியும் என்பதால், எந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் யார் மூலம் சென்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் எதற்காக கொண்டுவரபட்டது?
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக, தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களை இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கலாம். இந்த நிதியானது, குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் வாயிலாகவே செலுத்த முடியும் என்பதால், எந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் யார் மூலம் சென்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எப்பொழுது கிடைக்கும்?
ஒவ்வொரு காலாண்டிலும், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு இந்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகம் செய்யப்படும். அதன்படி, மார்ச் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு 9 நாட்களில் ரூபாய் 222 கோடிக்கு விற்பனையாகி உள்ளது..
தேர்தல் நிதிப் பத்திரங்கள் எங்கு கிடைக்கும்?
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளைகளில் இந்தப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Source: http://tamil.thehindu.com/india/article22832553.ece
POLITICAL FUND | ELECTION BOND | POLITICAL DONATION | Political fund regulation act | Political donation in Bond
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment