100% ORGANIC ECLIPTA PROSTRATA - BHRINGARAJ OIL - கரிசலாங்கண்ணி மூலிகை கூந்தல் தைலம் (15 ingrnts )
உங்கள் சொர்ணதேகி ஏற்றுமதி நிறுவனம், தரமான மூலிகை
தயாரிப்புகளை, மலிவான விலையில், அன்பு வாடிக்கையாளர்களுக்கு, கொண்டு சேர்ப்பதில், அரும்பணியாற்றி கொண்டிருக்கின்றது.
தரமான, எங்கள் தயாரிப்புகளை, வாங்கி பயனடையும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் , பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரும் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே அளவு வளர்வது இல்லை. குளிக்கும்போதோ, ஷாம்பு போடும்போதோ, தலை வாரும்போதோ இதைப் பார்க்க முடியும்.
சிந்தா துஷ்டி அதிகம் வந்தால் முடி உதிரும் என்பதைச் சரகர் கூறுகிறார். வழுக்கைத் தலையை alopecia என்பார்கள். ஆண்களுக்கு உருவாகும் ஒருவிதமான வழுக்கைக்கு androgenetic alopecia என்று பெயர். சில நேரம் புழுவெட்டு போல் ஏற்பட்டுக் கண் புருவம்கூட உதிர்ந்துவிடும்.
பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் போதும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் காணப்படும். பொடுகு நோய் தருணம் (seborrheic dermatitis) முடி உதிர்வதற்கு ஒரு காரணம். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும்.
வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணியின் தனித்துவம். கார்மேகக் கூந்தலில் உலா வர விரும்புகிறவர்களுக்கு கரிசலாங்கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்!
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேகசுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது.
வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மூலிகை தைலம்
சுத்தமான செக்கு தேங்காய் எண்ணையில், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி போன்ற 15 க்கும் மேற்பட்ட மூலிகைகளை பயன்படுத்தி மிகவும் பக்குவமாக காய்ச்சி பதப்படுத்தப்பட்ட மூலிகை கூந்தல் தைலம்.
கரிசலாங்கண்ணி மூலிகை கூந்தல் தைலத்தின் பயன்கள்
கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது.
இளநரை வராமல் தடுக்கிற அற்புத சக்தி கரிசலாங் கண்ணியில் இருக்கிறது.
கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.
கரிசலாங்கண்ணி ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
கரிசலாங்கண்ணி மூலிகை எண்ணையை குளிப்பதற்கு முன், தலையில் நன்கு தேய்த்துக்கொள்ளவும். நன்றாக ஊறியபின், சீயக்காய் பொடியை கொண்டு, உங்கள் சருமத்தை அலசவும் . தினமும் தலையில் சிறிதுதேய்த்து வரவும்.
இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி ‘கருகரு’வென்று வளரத் தொடங்கும். பேன் மற்றும் பொடுகினால் அவதிப்படுகிறவர்களுக்கான ஸ்பெஷல் தைலம் இது.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம். ஏனென்றால், இது 100% இயற்கை மருத்துவ, மூலிகை தைலம்.
வேதிக்கலவைகள் கலவாமல், பக்கவிளைவுகளற்ற, தரமான, இயற்கை மருத்துவ, மூலிகை தைலம்.
Packing : 100ml, 250ml, 500ml, 1000ml and above.
Shipping: Domestic and International shipping by DHL, Fedex, ST Courier and Professional Courier.
Delivery Time: Tamilnadu - 2 days, Other State - 3 to 4 days, Other Countries - 5 to 7 days.
For Contact:
Swarnatheghiexports@gmail.com
Whatsapp - +91 9940137099
வாழ்க வளமுடன்!!!
நன்றி
ReplyDelete