Swarnatheghi

Current news for Business, Health, Technology, Deal of toady, Health Tips, Agriculture, Product promotions, Best practices, Financial, Astrology, Spiritual-Devotional, Entertainments forTamilnadu-India and International.

Breaking

Tuesday, February 6, 2018

9 important Benefits of Fenugreek seeds | What is Fenugreek good for health | வெந்தயத்தில்டீயா? | கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? | குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக | Fenugreek exporter from India | Fenugreek Exporter in South Asia

வெந்தயத்தில்டீயா? 

தினமும்குடியுங்கள்...  அப்புறம்தெரியும்.....

Fenugreek seed is the ripe fruit of an annual herb. 
This robust herb has light green leaves, is 30-60 cm tall and produces slender, beaked pods, 
10-15 cm long, each pod contains 10-20 small hard yellowish brown seeds, which are 
smooth and oblong, about 3mm long, each grooved across one corner, 
giving them a hooked appearance. Read more....

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் 
ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.. 



 அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?


ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை #3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை #4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.

நன்மை #5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

நன்மை #6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை #7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை #8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை #9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை #10


பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை #11


ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை #12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை #13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.


நன்மை #14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை #16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை #17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை #18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை #19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை #20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.


SWARNATHEGHI EXPORTS

Best exporter in India - We offer all natural products
Natural Organic Honey-Millts-Herbs-Rice-Turmeric-Pepper-Clove | 
Nutmeg Mace-Cardamon-Cinnamon-Cumin Seeds | 
Fennel Seeds-Fenu Greek-Chili

No comments:

Post a Comment